×

நாகையில் தனியார் நிதி நிறுவன மோசடி: பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

நாகப்பட்டினம்: நாகையில் தனியார் நிதி நிறுவனத்தின் ரூ.250 கோடி மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதலீட்டுக்கான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க கூடியதால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி என்பவர் தனது மகன்கள் பாலாஜி, சிவா, செந்தில் ஆகியோரோடு இணைந்து சிவசக்தி என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

வங்கிகளை விட அதிக வட்டி தருவதாக கூறி ஆசைகாட்டியதால் அங்கு பொதுமக்களின் முதலீடு குவிந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பணம் திரும்ப வழங்கப்படாததால் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். 4 பேரை கைது செய்து விசாரித்த போது ரூ.250 கோடி மோசடி செய்யப்பட்டது அம்பலமானது. அந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டிருப்பதால் நாகை புத்தூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திரண்டனர்.

அப்போது முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்களை போலீசாரிடம் வழங்க மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசல் ஆவணங்களை வழங்கினால் ஏமாந்த பணத்தை பெற்று தருவதெற்கு எளிதாக இருக்கும் என பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் பொதுமக்களிடம் எடுத்து கூறினார். அங்கு கூட்டம் அதிகரித்ததால் திருமணம் மண்டபம் ஒன்றை ஏற்பாடு செய்த போலீசார் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்களை பெற்று கொண்டனர்.

சிலர் அசல் ஆவணங்களை வழங்க மறுப்பு தெரிவித்தனர். சிறை சென்ற தொழிலதிபரின் குடும்பம் ஜாமினில் வெளிவந்த நிலையில் அவர்களின் சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். அவற்றை ஏழாம் விட்டு பாதிக்கப்பட்ட 3,700பேருக்கு பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post நாகையில் தனியார் நிதி நிறுவன மோசடி: பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...