×

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024ம் ஆண்டு இந்திய வனப் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024ம் ஆண்டு இந்திய வனப் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இது தொடர்பான முதல்வரின் சமுக வலைதள பதிவில்:
நான்முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு இந்திய வனப் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பாராட்டினேன். UPSC குடிமைப் பணித் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவர்களுக்கு மிகப் பெரும் ஊக்கமாக நான் முதல்வன் திட்டம் அமைந்துள்ளதை அவர்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது. கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள், இந்த ஆண்டு இன்னும் சிறப்பாகத் தயாராகி, எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள் என கூறியுள்ளார்.

The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024ம் ஆண்டு இந்திய வனப் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Indian Forest Service ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது