×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓம் நமச்சிவாய என்று சொல்லக் கூடாது என மிரட்டியதாக வதந்தி: தகவல் சரிபார்ப்பகம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓம் நமச்சிவாய கூறக்கூடாது என கோயில் செயல் அலுவலர் மிரட்டியதாக பரவும் காணொளி உண்மை இல்லை என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் ‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மற்றும் கோயில் தெருக்களைச் சுற்றி, எங்கேயும், “ஓம் நமச்சிவாய” என உரக்கக் கூறக்கூடாதாம். அக்கோயிலின், EO மிரட்டல்’ என்று காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது பதாகையால் வந்த பிரச்சனை, ஓம் நமச்சிவாய சொல்வது தொடர்பானதல்ல. கடந்தாண்டு நவம்பரில், மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது தொடர்பாக அனுமதியின்றி நடத்திய போராட்டத்தில் பதாகைகள் உடன் கோயிலுக்குள் நுழைய முயன்ற சிலரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொளியை வைத்து ஓம் நமச்சிவாய சொல்லக்கூடாது என்று செயல் அலுவலர் மிரட்டல் விடுத்ததாக வதந்தி பரப்பி வருகின்றனர்’ என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓம் நமச்சிவாய என்று சொல்லக் கூடாது என மிரட்டியதாக வதந்தி: தகவல் சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Tags : Mylapore Kapaleeswarar ,CHENNAI ,Mylapore ,Kapaleeswarar temple ,Om Namachivaya ,Mylapore Kabaleeswarar temple ,Kabaleeswarar temple ,
× RELATED அசுர வேகத்தில் பைக் ஓட்டியதை...