×

வயலூர்-ஆதிநாயகி உடனுறை ஆதிநாதர் உடன் வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி

கோயிலுக்குள் இறைவன் வீற்றிருக்கிறான். நமது உடலான கோயிலுக்குள் ஆன்மாவாகிய இறை வீற்றிருக்கிறது. இவை இரண்டும் ஒரு புள்ளியில் இணைவது மாற்றங்களை உருவாக்கத்தக்கது. அந்த மாற்றத்தின் பலனை நாம் உணரலாம். எல்லாருக்கும் எல்லா திருத்தலங்களும் சென்றால் பலன்கள் கிட்டுவதில்லை. சரியான இடத்தில் சரியான தருணத்தில் இறைவனை தரிசனம் என்பது ஆன்மாவின் அற்புத தரிசனமாகும். சோழ வம்சத்தை சேர்ந்த அரசன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும் வழியில் தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பு ஒன்றை வெட்டி சாற்றை ருசிக்க முற்படும் பொழுது மூன்று துண்டுகளாக உடைந்து அச்சமயம் அந்த துண்டுகளிலிருந்து இரத்தம் வடியவே அரசன் அச்சம் அடைந்தான். கரும்பு பயிரிட்ட இடத்தில் வயலை அவன் தோண்டிப் பார்க்கவே அங்கு சிவலிங்கம் இருந்தது. கரும்பு இருந்த இடத்திலேயே சிவலிங்கத்தை ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து ஆதிநாதர் ஆதிநாயகி என்ற திருநாமத்தோடு திருக்கோயில் எழுப்பப்பட்டது. வயலின் நடுவே சுயம்புவாக தோன்றிய மூலவர் என்பதால் வயலூர் என அவ்விடம் அழைக்கப்பட்டது. வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமியாக உள்ள முருகப் பெருமான் ஆதிநாதரையும் ஆதிநாயகியையும் வழிபடுவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் உள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தன் வேலால் குத்தி உண்டாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

அருணகிரிநாதரை முருகப் பெருமான் திருவண்ணாமலையில் தடுத்தாற் கொண்டு வயலூருக்கு அழைத்து முருகனின் சிறப்புகளை பாமாலை தொடுக்கச் செய்தார். வயலூர் முருகனின் மீது திருமுருக கிருபானந்த வாரியாரும் தீராத பக்தி கொண்டிருந்தார். இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், வியாழன், செவ்வாய், சனி, சுக்ரன் ஆகிய கிரகங்கள் திருநாமம் செய்விக்கின்றன.
* கும்பம், மீன லக்னக் காரர்கள் வெகு நாட்களாக திருமணமாகாதவர்கள் நீல நிற சங்கு பூவை மாலையாக தொடுத்து. சக்தி தீர்த்தத்தில் நீராடி சுவாமி கொடுத்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
* அனுஷம் நட்சத்திர நன்நாளில் சங்கு பூவை மாலையாக தொடுத்து நந்தி பகவானுக்கு கொடுத்து உங்களின் விருப்பங்களை வைத்தால் திருமணம் நடக்கும்.
* பூசம் நட்சத்திர நாளில் சக்தி தீர்த்ததில் நீராடி ஆதிநாதரையும் ஆதிநாயகியையும் தரிசனம் செய்து பின்பு வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணியரை வழிபட்டு வந்தால் திருமணம் ஆகாத பெண்ணிற்கு உடை தானம் செய்தால் திருமணம் கைகூடும்.
* இயந்திரதுறை மற்றும் கட்டிடத் துறையில் இருப்பவர்கள் அனுஷம் நட்சத்திர நாளில் சுவாமிக்கு கரும்புச் சாற்றில் அபிஷேகம் செய்து கரும்பை சுவாமியிடம் வைத்து வழிபாடு செய்து வந்தால் தொழில் மேன்மேலும் வளரும்.
* ஐஸ்வர்யம் பெருகுவதற்கும் குபேர சம்பத்து உண்டாவதற்கும், நீண்ட நாள் நோய்வாய்பட்டு சிரமப்படுபவர்களுக்கும் மகம் நட்சத்திரத் அன்று கரும்பு சாற்றில் அபிஷேகம் செய்து அதை நோய் வாய்ப்பட்டவர்களுக்கு கொடுத்து வந்தால் நோய் குணமாகும்.
* கிருத்திகை நடசத்திர நாளில் சுவாமிக்கு கரும்பை நெய்வேத்தியமாக வைத்து யானைக்கு கொடுத்து வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார்கள். இது கஜ பூஜை செய்வதற்கு சமம்.
* வைகாசி மாதம் விசாகம் நன்னாளில் கொண்டை கடலையும், கரும்பு சாற்றில் செய்த பொங்கல் மற்றும் வெள்ளை மொச்சை ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைத்து வரும் பக்தர்களுக்கு கொடுத்தால் எந்த பிரச்னையும் நிவர்த்தி ஆகும். சகல சௌபாக்கியங்களும் குபேர சம்பத்தும் உண்டாகும்.

The post வயலூர்-ஆதிநாயகி உடனுறை ஆதிநாதர் உடன் வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி appeared first on Dinakaran.

Tags : Valli ,Sametha Subramaniyaswamy ,Vailur-Adinayagi Utanura Adinathar ,Violur-Adinayagi Utanura Adinathar ,Goddess ,Sameda Subramaniyaswamy ,
× RELATED கிறிஸ்துமஸை வரவேற்போம்!