×

மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 90வது பிறந்தநாள்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள், திமுக முன்னணி தலைவர்கள் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய வரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மறைந்த முரசொலி மாறனின் 90வது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் திமுகவினரால் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன், மத்திய சென்னை தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கிரிராஜன் எம்பி, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, டாக்டர் எழிலன், எஸ்.ஆர்.ராஜா, சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, மு.க.தமிழரசன், பகுதி செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, மதன்மோகன், வினோத் வேலாயுதம், வட்ட செயலாளர் மாரி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பொன்னேரி அன்புவாணன், வணிகர் நலவாரிய நிர்வாக குழு உறுப்பினர் சேப்பாக்கம் வி.பி.மணி,

தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவரும், தமிழ்நாடு அரசு மாற்று திறனாளிகள் நல வாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள்-இந்நாள் எம்பி,எம்எல்ஏக்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி,

ஆதி திராவிடர் நலக்குழு, மீனவர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப்பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள்-நிர்வாகிகள், மற்றும் திமுக தோழர்கள் என ஏராளமானோர் முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போல மாநிலம் முழுவதும் கட்சி அலுவலகங்களில் முரசொலி மாறனின் திருஉருவப்படத்துக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

The post மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 90வது பிறந்தநாள்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Murasoli Maran ,DMK ,general secretary ,Durai Murugan ,Chennai ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...