- முதுகுளத்தூர்
- Mudugulathur
- வடமடு மஞ்சுவிரட்டு
- பொங்கல் பண்டிகை.வாழவந்தாள்
- அம்மன் கோயில்
- எஸ்ஆர்என் பழங்குளம்
- வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
- பொங்கல் திருவிழா
- பூதட்டு திருவிழா
சாயல்குடி : முதுகுளத்தூர் அருகே கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றறது.முதுகுளத்தூர் அருகேயுள்ள எஸ்.ஆர்.என்.பழங்குளத்தில் வேம்பார் உடைய அய்யனார், வாழவந்தாள் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பொங்கல் விழா, பூத்தட்டு திருவிழாவையொட்டி, 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 காளைகள் கலந்து கொண்டன.
இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வோர் காளையாக களம் இறக்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் 10க்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சுற்றுக்கு 9 வீரர்கள் வீதம் களமிறங்கினர்.போட்டியில் தீரத்துடன் பாய்ந்து காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பணம், அண்டா உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை எஸ்.ஆர்.என்.பழங்குளம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
The post முதுகுளத்தூர் அருகே களைகட்டிய வடமாடு மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.