×

வேளண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

சென்னை: வேளண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்; 1,500 ஏக்கரில் வீரிய ஒட்டு ரக ஆமண சாகுபடி செய்ய ரூ.18 லட்சம் ஒதுக்கீடு, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.3 கோடி நிதி ஒதுக்கீடு, கன்னியாகுமரியில் பரிசோதனை, பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து தேனீ வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு, துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு, சூரிய காந்தி பயிரிடும் பரப்பை அதிகரிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

The post வேளண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Dinakaran ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...