×

நிலவை ஆராயச் சென்ற சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது: இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: நிலவை ஆராயச் சென்ற சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. கடந்த 20 நாட்களாக பூமியிலிருந்து நிலவை நோக்கி 3.84 லட்சம் கி.மீ தூரம் விண்கலம் பயணித்துள்ளது.

நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புவியின் நீள்வட்டப்பாதையில் 5 கட்டங்களாக உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ““சந்திரன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டபாதை யில் அனுப்பப்பட்டது. விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசையை உணர்கிறது. இன்று இரவு 11 மணி அள வில் அடுத்த சுற்று வட்ட பாதைக்கு நகர்த்தப்படும். சந்திரயான் 3 செயல்பா டுகள் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து விண்கலத்தின் செயல்பாடுகள் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நிலவின் சுற்றுவட்டப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை ஆகஸ்ட் 6ம் தேதி இரவு 11 மணிக்கு மேற்கொள்ளப்படும் எனவும் அடுத்த 19 நாள்கள் மிக முக்கியமானமவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிலவை ஆராயச் சென்ற சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Moon ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...