×

மிலாதுநபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிப்பு!

புதுச்சேரி: மிலாதுநபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி;

“மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு 16.09.2024 (திங்கள்) பதிலாக 17.09.2024 (செவ்வாய்) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 17.09.2024 அன்று ஜிப்மரில் வெளிபுற நோயாளிகள் பிரிவு இயங்காது.

இந்த தேதியில் நோயாளிகள் வெளிபுற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். 16.09.2024 அன்று ஜிப்மர் மருத்துவமனை வழக்கம் போல் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மிலாதுநபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Miladhunabi ,Jimmer External Treatment Unit ,Puducherry ,Zipmar ,Government of Puducherry ,Miladi Nabi ,Prophet Muhammad ,
× RELATED புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்..!!