×

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் 84 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பாடநூல் கழக நூல்கள் விற்பனைக்கான மின் வணிக இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ், மேயர் பிரியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

The post சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai Central Metro Station ,Chennai ,School Education Department ,Tamil Nadu Textbook and Educational Services Corporation ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...