×

பெண்ணின் மூச்சுக்குழாயில் 8 ஆண்டாக சிக்கியிருந்த உலோகம்

சேலம்: கள்ளக்குறிச்சியில் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 12ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவ குழுவினர் பரிசோதித்த போது, மூச்சுக்குழாயில் நுரையீரல் பகுதியில் உடைந்த உலோக துண்டு இருப்பது தெரியவந்தது. 8 வருடங்களாக உலோக குழாயை வைத்துக் கொண்டே சுவாசித்து வந்துள்ளார். இதையடுத்து, அன்றைய தினமே காது, மூக்கு, தொண்டை பிரிவின் துறைத்தலைவர் கிருஷ்ணசுந்தரி மற்றும் மயக்கவியல் துறைத்தலைவர் நாகராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினரால், நவீன டெலி பிரான்ஸ்கோப் கருவி மூலம் நுரையீரலில் உடைந்திருந்த உலோக குழாய் ‘டிரக்கியாஸ்டமி’ என்னும் பாதுகாப்பான முறையில் எடுத்து அகற்றப்பட்டது. இதையடுத்து வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு டீன் மணி பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து டீன் மணி கூறுகையில், ‘இது போன்று மிகவும் நுட்பமான டிரக்கியாஸ்டமி சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை செலவாகும். இங்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார்’ என்றார்.

The post பெண்ணின் மூச்சுக்குழாயில் 8 ஆண்டாக சிக்கியிருந்த உலோகம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்...