×

எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலி இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு இன்று (நவ.25) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 6 எம்.பி.பி.எஸ் மற்றும் 28 பி.டி.எஸ் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.

மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் 7 எம்.பி.பி.எஸ். இடங்களும், 28 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருப்பதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்தது. இதற்கிடையில் அன்னை மருத்துவ கல்லூரியில் 50 இடங்களும், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 50 இடங்களும் கூடுதலாக ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான காலி இடங்கள் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்தது.

எனவே இந்த மருத்துவ படிப்பிற்கான மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது. இதன்படி நவம்பர் 25ம் தேதி முதல் சிறப்பு கலந்தாய்வு தொடங்கி நடைபெறுகிறது. அந்தவகையில் ரேங்க் 1 முதல் 28,819 வரையிலான மாணவர்களுக்கான கவுன்சிலிங் நாளை இரவு 8 மணி வரை (நவ 26) நடைபெறும். சாய்ஸ் பில்லிங் மற்றும் சமர்ப்பித்தல் நவம்பர் 27ம் அன்று காலை 10 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5 மணிக்கு நிறைவடையும். நவம்பர் 29ம் தேதி இடஒதுக்கீட்டுப் பணிகள் நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு முடிவுகள் வெளியான பிறகு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இடஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்வது கல்லூரியில் இணைந்ததாகக் கருதப்படுகிறது. பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, டிசம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு முன் கல்லூரியில் சென்று சேர்க்கைப் பெற வேண்டும். சீட் இல்லாத விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்தச் சுற்றில் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.

இதற்கு முன் சேர்ந்து, 1, 2 அல்லது காலியிட சுற்றில் தொடர்பவர்கள், மறு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இருப்பினும், மெய்நிகர் காலியிடங்களை உயர்த்த விண்ணப்பதாரர்கள் இந்த சுற்றில் பதிவு செய்ய வேண்டும். முந்தைய சுற்றுகளில் ஒதுக்கப்பட்ட இருக்கையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்தச் சுற்றில் பங்கேற்கத் தேவையில்லை. இருப்பினும், விண்ணப்பதாரர்கள் மறு ஒதுக்கீட்டைத் தேர்வுசெய்து, இந்தச் சுற்றில் மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டால், அவர்கள் தங்களுக்கு முன் ஒதுக்கப்பட்ட இருக்கையைப் பெற முடியாது.

The post எம்பிபிஎஸ், பிடிஎஸ் காலி இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : MBPS ,BTS ,Chennai ,Medical and Dental Colleges ,Colleges of ,Tamil Nadu ,B. B. S ,Dinakaran ,
× RELATED முதுகலை மருத்துவ படிப்பில் சேர போலி...