×

மே 2ல் பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

 

சிவகாசி, ஏப்.22: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா மே 2ல் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை பொங்கல் திருவிழா மே 2ல் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. அன்றைய தினம் மதியம் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் அம்மன், விநாயகருடன் கடை கோயிலிலிருந்து பத்ரகாளியம்மன் கோயிலுக்கு புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெறும். இரவு கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவு, அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மே 9ல் பொங்கல் திருவிழா, மறுநாள் கயிறு குத்து திருவிழா, மே 12ல் தேரோட்டம் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

The post மே 2ல் பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Badrakalaiyamman Temple Sitra Festival ,Sivakasi ,Shivakasi Badrakalaiamman Temple Sitra Pongal Festival ,Shivakasi Badrakalyamman ,Badrakalyamman Temple Sitra Festival ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி