×

தன்னைவிட 10 வயது இளையவரை திருமணம் செய்த பிரபல நடிகை ஊர்மிளா விவாகரத்து: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை: தன்னைவிட சுமார் 10 ஆண்டுகள் இளையவரை திருமணம் செய்த பிரபல நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதால், பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும் மாடலுமான மொசின் அக்தரை திருமணம் செய்து கொண்டார். மொசின் அக்தரை காட்டிலும் ஊர்மிளா 10 வயது மூத்தவர் ஆவார். இந்நிலையில் தனது கணவர் மொசின் அக்தருடனான திருமண உறவில் இருந்து ஊர்மிளா விலகி இருப்பதாக தெரிகிறது.

அதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது கணவருடன் இருந்து விவாகரத்து கோரி மும்பை நீதிமன்றத்தில் ஊர்மிளா மனு தாக்கல் செய்துள்ளதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் ஊர்மிளாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. என்ன காரணத்திற்காக தம்பதிகள் பிரிகின்றனர் என்பது குறித்த விபரங்களை பல்வேறு தரப்பினரும் அறிய விரும்புகின்றனர். முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு, பிரபல பாலிவுட் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ராவின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஊர்மிளாவும் மொசின் அக்தரும் சந்தித்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு, இருவரும் நட்பாக பழகி காதலித்தனர். 2016ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த ஊர்மிளா, 2019ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். அதே ஆண்டில் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், 2020ல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தன்னைவிட 10 வயது இளையவரை திருமணம் செய்த பிரபல நடிகை ஊர்மிளா விவாகரத்து: பாலிவுட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Urmila Divorce ,Bollywood ,Mumbai ,Urmila ,Urmila Madonkar ,
× RELATED பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சினிமா...