×

ரம்ஜான் விற்பனையை எதிர்பார்த்திருந்த நிலையில் ‘களை’ இழந்த மணப்பாறை ஆட்டுச்சந்தை: 40 லட்சத்திற்கும் குறைவாக விற்பனை

மணப்பாறை: ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.1 கோடிக்கும் மேல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மணப்பாறை ஆட்டுச்சந்தையில் ரூ.40 லட்சத்திற்கும் குறைவாக விற்பனையானதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாரந்தோறும் புதன் கிழமை தோறும் ஆட்டுச்சந்தை (கால்நடைகள்) நடை பெறுவது வழக்கம். வாரந்தோறும் புதன் கிழமை காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெறும் சந்தைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். வாரந்தோறும் சந்தைக்கு 5000 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் ரம்ஜான் பெருநாள் பண்டிகையொட்டி வருவதை முன்னிட்டு நேற்று நடை பெற்ற மணப்பாறை ஆட்டு சந்தையில் வியாபாரம் பெரும் அளவில் நடை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் குறைந்த அளவிலான விற்பனை மட்டுமே நடைபெற்றது. இதே போல ஆடுகளுக்கும் உரிய விலை கிடைக்காததால் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை வாங்க வியாபாரிகள் வராததாலும், ஆடு உரிமையாளர், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை காலம் என்பதால் ஆட்டுச் சந்தையில் இறைச்சிக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு இறைச்சி ஆடுகள் கூட விற்பனை மந்தமானதால் ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து பிழைக்கும் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் ஆட்டுச் சந்தையில் ரூ 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடுகள், வியாபாரிகள் வரத்து குறைவானதால் ரூ. 40 லட்சத்திற்க்கும் குறைவான அளவிலான வியாபாரம் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

The post ரம்ஜான் விற்பனையை எதிர்பார்த்திருந்த நிலையில் ‘களை’ இழந்த மணப்பாறை ஆட்டுச்சந்தை: 40 லட்சத்திற்கும் குறைவாக விற்பனை appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Ramzan ,Manparai ,Goat Market ,Ramzan festival ,
× RELATED மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்...