×
Saravana Stores

மலேசியாவில் காவல் நிலையத்தில் தீவிரவாத தாக்குதல்: 2 போலீசார் உட்பட 3 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள உலுதிராம் காவல் நிலையத்துக்கு நேற்று மர்மநபர் ஒருவன் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற காவலரை மர்மநபர் அரிவாளால் வெட்டி கொன்றார். கொல்லப்பட்ட காவலரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து கொண்ட மர்மநபர் உள்ளே சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இன்னொரு காவலர் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் பலத்த காயமடைந்த காவலர் உயிரிழந்தார். அவர் வேறு சிலரை தாக்கும் எண்ணத்தோடு அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அங்கு விரைந்து வந்த காவலர் தாக்குதலில் ஈடுபட்ட 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை சுட்டு கொன்றார். சுட்டு கொல்லப்பட்டவர் அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஜெம்மா இஸ்லாமியா என்ற அமைப்பை சேர்ந்தவர். அவனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

The post மலேசியாவில் காவல் நிலையத்தில் தீவிரவாத தாக்குதல்: 2 போலீசார் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Kuala Lumpur ,Uludiram Police Station ,Johor province of ,
× RELATED விமானங்களில் வந்த 4 பயணிகளிடம் ரூ.1.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்