×

மலேசியாவிலிருந்து சென்னை வந்தபோது தாலியை கழற்றச்சொன்னதாக பெண் கூறிய புகார் குறித்து சுங்கத்துறை ஆணையர் விளக்கம்

சென்னை: மலேசியாவிலிருந்து சென்னை வந்தபோது தாலியை கழற்றச்சொன்னதாக பெண் கூறிய புகார் குறித்து சுங்கத்துறை ஆணையர் விளக்கமளித்தார். இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் ரூ.50,000 மதிப்புள்ள தங்க நகை மட்டுமே கொண்டுவர விதிகள் அனுமதிக்கிறது. மலேசியாவிலிருந்து வந்த பெண் அளவுக்கு அதிகமாக நகை அணிந்திருந்ததால் சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். தான் எத்தனை சவரன் நகை கொண்டுவந்துள்ளார் என்பதை மலேசிய பெண் கூற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

The post மலேசியாவிலிருந்து சென்னை வந்தபோது தாலியை கழற்றச்சொன்னதாக பெண் கூறிய புகார் குறித்து சுங்கத்துறை ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Commissioner of Customs ,Chennai ,Malaysia ,India ,Dinakaran ,
× RELATED கடத்தப்பட்ட 5,000 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்