×

ரூ.1 கோடி லாட்டரி பரிசு கிடைத்த வடமாநில தொழிலாளிக்கு போலீஸ் பாதுகாப்பு: பயத்தில் காய்ச்சல் வந்ததால் அவதி

திருவனந்தபுரம்: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிர்ஷு ராபா என்பவர் திருவனந்தபுரத்தில் தங்கி கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தம்பானூரில் உள்ள ஒரு லாட்டரிக் கடையில் கேரள அரசின் பிப்டி பிப்டி லாட்டரியில் ஒரே எண் கொண்ட 5 டிக்கெட்டுகளை வாங்கினார். இதில் அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.1 கோடி முதல் பரிசு விழுந்தது.

இதனால் யாராவது நம்மை கொலை செய்துவிட்டு லாட்டரி டிக்கெட்டை பறித்துச் செல்லலாம் என பயந்த ராபா திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். ஆனால் அதன் பிறகும் அவருக்கு பயம் விலகவில்லை. பயத்தில் அவருக்கு காய்ச்சலும் வந்துவிட்டது. இதனால் மீண்டும் தம்பானூர் போலீசார் அவரை வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். பணம் கிடைத்து ராபா ஊருக்கு செல்லும் வரை அவரை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

The post ரூ.1 கோடி லாட்டரி பரிசு கிடைத்த வடமாநில தொழிலாளிக்கு போலீஸ் பாதுகாப்பு: பயத்தில் காய்ச்சல் வந்ததால் அவதி appeared first on Dinakaran.

Tags : North State ,Thiruvananthapuram ,Birshu Rapa ,West Bengal ,North ,Awadi ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பலி