- லோக் சபா ஊராட்சி
- திமுகா
- கனிமொழி
- தூத்துக்குடி
- இந்திய பாராளுமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மக்களவை
- தூத்துக்குடி
- தின மலர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். 543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த முறை திமுக எம்பி கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட்டார்.
அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன், நாம் தமிழர் கட்சியின் ரொவினா ரூத் ஜென் ஆகியோர் தூத்துக்குடியில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 12.45 மணி நிலவரப்படி கனிமொழி-2,44,034 வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை பெற்றுவருகிறார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி -67,522 வாக்குகளும், பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன்- 47,094 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
The post மக்களவை தேர்தல்: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை appeared first on Dinakaran.