×

சாலை விபத்தில் பலியாவோரின் குடும்பத்துக்கு ரூ2 லட்சம் நிதியுதவி : மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : நெடுஞ்சாலை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. சாலை விதிமுறைகளை  மேலும் கடுமையாக்கவும், அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும் பெரிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆணையானது தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கும் பொருந்தும்’’ என தெரிவித்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...