×

ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் பிறந்த நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக குடியரசு தலைவரின் அயராத முயற்சிகள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளன. இந்த சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், அவருக்கு நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அவரது முயற்சிகளில் தொடர்ச்சியான வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஜனாதிபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டை கருணை, கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்திச் செல்லும்நிலையில், உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

 

The post ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : L. Murugan ,President ,Draupadi Murmu ,Chennai ,Union Minister of State ,President Draupadi Murmu ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...