- விடுதலை சிறுத்தைகள்
- பொன்னேரி
- விடுதலை புலிகள் கட்சி
- கல்குறிச்சியல்
- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
- மீஞ்சூர் வடக்கு ஒன்றியம்
- தேவம்படு
பொன்னேரி: விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதைக்கு எதிரான மாநாடு அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியல் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் பொன்னேரி அடுத்த தேவம்பட்டு கிராமத்தில் திரைப்பட இயக்குநர் கோபி நயினார் ஆலோசனையின்படி நேற்று மாலை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மோத்தி, மண்டல செயலளர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி துணை செயலாளர் லலிதா, மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநாட்டில் பங்கேற்பதற்கான வாகன ஏற்பாடுகள் மற்றும் மகளிர் குழுக்குள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுவர் விளம்பரம், பேனர் வைத்து விளம்பரப்படுத்துதல், துண்டறிக்கை வழங்குதல் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதில் இளஞ்சிறுத்தை தொகுதி செயலாளர் மீஞ்சூர் அபுபக்கர், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் நீலவேணி, தொண்டரணி அமைப்பாளர் ரூபன், நிர்வாகிகள் இருதயராஜ், சிலம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தங்களை விடுதலைச் சிறுத்தை கட்சியில் இணைத்துக்கொண்டனர். முன்னதாக தேவம்பட்டு அம்பேத்கர் நகரில் விடுதலைச்சிறுத்தைகள் கொடியேற்றப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் கண்ணதாசன் நன்றியுரை கூறினார்.
The post விடுதலை சிறுத்தைகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.