×

எல்ஜிபிடிக்யூ ப்ளஸ் தோழர்களுக்கு விசிக ஆதரவாய் நிற்கும்: திருமாவளவன் பதிவு

சென்னை: விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: கோவை – வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த “மாணவர் பாராளுமன்றம்” நிகழ்வின்போது ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன்.விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.

எப்போதும் எல்ஜிபிடிக்யூ ப்ளஸ் தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. எனவே, எல்ஜிபிடிக்யூ ப்ளஸ் பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 

The post எல்ஜிபிடிக்யூ ப்ளஸ் தோழர்களுக்கு விசிக ஆதரவாய் நிற்கும்: திருமாவளவன் பதிவு appeared first on Dinakaran.

Tags : VKC ,LGBTQ ,Thirumavalavan ,Chennai ,Coimbatore ,Student Parliament ,Agricultural University ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்