×

அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக சந்திப்போம்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக சந்திப்போம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் 2023-24 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி; பல்கலை.களில், கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. மொழி பாடங்களுக்கு 100% அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும். மற்ற பாடங்களை பொறுத்தவரை அரசு வகுத்துள்ள 75% பாடத்திட்டமும், கல்லூரிகள் தாங்களாக 25% பாடத்திட்டமும் பின்பற்ற வேண்டும். மாணவர்களும், பேராசிரியர்களும் கல்லூரி மாறும்போதும் ஒரே பாடத்திட்டம் பயனளிக்கும். தமிழக பல்கலை., கல்லூரிகளின் தரத்தை உலக அளவில் உயர்த்துவதே எங்கள் இலக்கு. அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5000 ரூபாய் கூடுதலாக ஊதியம்.

கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் 20 ஆயிரத்தில் இருந்து 25,000 ஆக உயர்த்தப்படும். பேராசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வு இனி ஆண்டுதோறும் நடைபெறும். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கல்லூரிகளில் மாநில அளவில் இலக்கிய போட்டிகள் நடத்தப்படும். காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடம் நிரப்பப்படும். 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அமலாக்கத்துறை விசாரணை நாங்கள் பார்க்காதது அல்ல. அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் கூறினார்.

The post அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக சந்திப்போம்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,Anna University ,Chennai Government University ,Dinakaran ,
× RELATED உடல்நலக் குறைவால் காலமான பேராயர்...