×

திருக்கழுக்குன்றத்தில் லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு பணிகள் துவங்கியது


திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ‘பட்சி தீர்த்தம்’ என்றழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வர் மலைக்கோயில் உள்ளது. வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் அடிவாரத்திற்கு சற்று அருகாமையில் பக்தவச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ள, ‘லட்சுமி தீர்த்தம் குளம்’ மிகவும் பழமையான குளமாகும். இக்குளம் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பு இல்லாததால் முட்புதர் மண்டிப்போய், விஷ ஜந்துக்களின் புகலிடமாக விளங்கியது. இந்நிலையில், பழமை வாய்ந்த இக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று பக்தர்களும்,

பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்ததின்பேரில் குளத்தை தூர் வாரி சுத்தம் செய்து, குளத்தின் கரையோரம் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையிலான பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, பூங்கொடி கணேசன், திமுக நிர்வாகிகள் செங்குட்டுவன், சரவணன், இளங்கோ, அழகிரி, அகமது உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு பணிகள் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Lakshmi ,Thirukkazhukundram ,Vedagireeswar hill ,Patshi Theertham ,Vedagireeswarar hill temple ,eastern Rajagopuram ,Bhakthavachaleswarar temple ,Lakshmi Theertham ,Theertham ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...