×

கிருஷ்ணகிரி அருகே அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஆற்றைக் கடக்க வேண்டிய அவலம்: மாணவர்கள் முதல் கர்ப்பிணிகள் வரை தண்ணீரில் தத்தளிக்கும் சூழல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பல ஆண்டுகளாக அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மார்க்கண்டேயன் ஆற்றில் இடுப்பளவு நீரில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு இருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேப்பனப்பள்ளி அருகே நெடுசாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜே.ஜே.நகர் முனியப்பன் கொட்டாய், தண்டு மாரியம்மன் கோயில் முத்துராமன் கொட்டாய், பொன்னியம்மன் கோயில் ஆகிய கிராமங்கள் உள்ளன.

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பாயும் மார்க்கண்டேய நதி சொர்ணாம்பிகை நதி மற்றும் குப்தா நதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் இடத்தில் ஒரு தனி தீவு போல இந்த கிராமங்கள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழை காரணமாக 3 நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளில் நீர் வடியாமல் உள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மார்க்கண்டேய நதியை கடந்து நெடுசாலை கிராமத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் கர்ப்பிணிகள் வரை அனைவரும் இடுப்பளவு தண்ணீரை கடந்தே நெடுசாலை கிராமத்துக்கு சென்று வருகின்றனர். 5 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டும் என்பதால் விவசாய பணிகளுக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை என்று புகை எழுந்துள்ளது. எனவே, தங்கள் கிராமத்துக்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரி அருகே அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஆற்றைக் கடக்க வேண்டிய அவலம்: மாணவர்கள் முதல் கர்ப்பிணிகள் வரை தண்ணீரில் தத்தளிக்கும் சூழல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Markandeyan river ,Dinakaran ,
× RELATED முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு...