×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு

சென்னை: திருமணம் உள்ளிட்ட சுபமுகூர்த்த நாட்கள் முடிந்த நிலையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி, காட்டுமல்லி ரூ.200க்கும், முல்லை, ஜாதிமல்லி ரூ.250க்கும், கனகாம்பரம் ரூ.400க்கும், சாமந்தி ரூ.100க்கும், சம்பங்கி, பன்னீர் ரோஸ் ரூ.40க்கும், சாக்லெட் ரோஸ் ரூ.50க்கும், அரளி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் குறைவான விலையில் பூக்கள் விற்பனையானது’’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Chennai ,Koyambedu ,
× RELATED கோயம்பேடுக்கு வரத்து குறைவு...