அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் தக்காளி, கேரட் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி 30 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் கேரட் 50 ரூபாயில் இருந்து 100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130க்கும் கேரட் 120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற காய்கறிகள் விலை வருமாறு; ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 க்கும் சின்ன வெங்காயம் மற்றும் பீட்ரூட் 90 க்கும் பீன்ஸ் 80க்கும் காராமணி 60க்கும் சேனைக்கிழங்கு 70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் 110க்கும் சேம கிழங்கு மற்றும் காலி பிளவர், பீர்க்கங்காய் 50 க்கும் பச்சை மிளகாய் 100க்கும் பட்டாணி 200 க்கும் இஞ்சி 150 க்கும் பூண்டு 350 க்கும் அவரைக்காய் 75 க்கும் எலுமிச்சை பழம் 120 க்கும் வண்ண குடமிளகாய் 160 க்கும் சவ்சவ், முள்ளங்கி, வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் நூக்கல் 50க்கும் கோவக்காய், கொத்தவரங்காய் புடலங்காய் 30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு: தக்காளி, கேரட் ரூ.100க்கு விற்பனை appeared first on Dinakaran.