×

கோயம்பேடு மார்க்கெட்டில்தக்காளி கிலோ ரூ.60க்கு எகிறியது: ரூ.25லிருந்து கிடுகிடு உயர்வு

சென்னை: மழை விட்டுவிட்டு பெய்வதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவேன அதிகரித்து ரூ.25லிருந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 60 வாகனங்களில் இருந்து 1,300 டன் தக்காளி வருவது வழக்கம்.

இந்நிலையில் சென்ற வாரம் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 35 வாகனங்களில் இருந்து 900 டன் தக்காளி மட்டுமே வந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25 இருந்து ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.35லிருந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘மழைவிட்டுவிட்டு பெய்து வருவதாலும் தக்காளி வரத்து குறைந்ததாலும் விலை தற்போது உயர்ந்துள்ளது. மழை மீண்டும் விட்டுவிட்டு பெய்து வந்தால் தக்காளியின் விலை மேலும் உயரும். மழை நின்றால் மீண்டும் தக்காளியின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது’ என கூறினார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில்தக்காளி கிலோ ரூ.60க்கு எகிறியது: ரூ.25லிருந்து கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Chennai ,Koyambedu market ,Andhra Pradesh ,Karnataka ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...