தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி பகுதிகளில் நேற்று பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து நேற்று காலை குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், படிப்படியாக பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நேற்று பிற்பகல் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து சீராகாததால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், குற்றாலத்திலும் மழை பெய்யவில்லை எனவே விரைவில் தண்ணீர் குறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தண்ணீர் குறையும் பட்சத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post நீர்வரத்து சீராகாததால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.