×

கியா கேரன்ஸ் எம்பிவி

கியா இந்தியா நிறுவனம், கேரன்ஸ் எம்பிவி லக்ஸரி (ஓ) என்ற டாப் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் இரண்டிலும் கிடைக்கிறது. ஏற்கெனவே உள்ள லக்ஸரி மற்றும் லக்ஸரி பிளஸ் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இது இருக்கும். பிஎஸ்6 – 2 சுற்றுச்சூழல் விதிகளுக்கு இணங்க இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. துவக்க ஷோரூம் விலையாக பெட்ரோல் கார் சுமார் ரூ.17 லட்சம் எனவும், டீசல் கார் ரூ.17.7 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, லக்ஸரி பிளஸ் டர்போ பெட்ரோல் வேரியண்டை விட ரூ.1.45 லட்சமும், டீசல் வேரியண்ட் லக்ஸரி வரிசையில் உள்ள டாப் வேரியண்டை விட ரூ.1.10 லட்சம் குறைவாகும். பெட்ரோல் வேரியண்டை பொறுத்தவரை 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உள்ளது.

இது அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல், 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின், அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். புதிய வேரியண்ட்டில் டாப் வேரியண்டில் உள்ள வயர்லெஸ் சார்ஜர், 8 ஸ்பீக்கர் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் போன்றவை இடம்பெறவில்லை. அதேநேரத்தில், லெக்ட்ரிக் சன்ரூப், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் போன்றவை இடம்பெற்றுள்ளன.

The post கியா கேரன்ஸ் எம்பிவி appeared first on Dinakaran.

Tags : Kia ,Kia India ,
× RELATED கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர்...