×

கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி மறுப்பு: திகார் சிறை பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலை சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், அவர் திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘கட்சியின் எம்பி என்ற முறையில் ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தேன்.

ஆனால், திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க திகார் சிறை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். இந்த வழக்கை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி மறுப்பு: திகார் சிறை பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : KEJRIWAL ,DELHI EYCOURT ,DIGARH ,NEW DELHI ,AMMSTATE ,KEJRIWALI ,DELHI ,Tigar ,Delhi Eicourt ,Dikar ,Dinakaran ,
× RELATED டெல்லியின் ஒரே முதல்வர்...