×

கீழடி ஆய்வுகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என கூறுவது தமிழர் தொன்மை வரலாற்றை ஏற்க மறுக்கும் வன்மம்: ஒன்றிய அமைச்சர் செகாவத்துக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் அகழாய்வும், ஆராய்ச்சியும் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சார மரபுகளின் தொன்மை சிறப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக 2015 முதல் இதுவரை 5 கட்டங்களாக அகழாய்வு செய்யப்பட்ட கீழடி ஆய்வில் கிடைத்துள்ள 6ஆயிரத்துக்கும் அதிகமான தொல்லியல் சான்றுகள் தமிழர்கள் மற்றும் தென்னிந்திய மக்களிடம் நிலவி வந்த மதச்சார்பற்ற கலாச்சாரத்தை மறுக்க முடியாத அளவில் அறிவியல் ஆதாரங்களை முன் வைத்துள்ளது.

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் செகாவத், கீழடி ஆய்வில் கண்டறிந்த தரவுகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என கூறுவது தமிழர் தொன்மை வரலாற்றை மறுக்கும் வன்மத்துடன் அணுகும் செயலாகும். சர்வதேச ஆய்வறிஞர்கள் பலர் உறுதி செய்துள்ள திராவிட, தமிழர் நாகரிகம் தொன்மை நாகரிகம் என்பது நாள்தோறும் உறுதிப்பட்டு வருகிறது. இதனை வரலாறு உறுதி செய்து தீர்ப்பெழுதும் போது, வரலாற்றை திரித்து கூறிய கருத்துகள் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படும்.

The post கீழடி ஆய்வுகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என கூறுவது தமிழர் தொன்மை வரலாற்றை ஏற்க மறுக்கும் வன்மம்: ஒன்றிய அமைச்சர் செகாவத்துக்கு முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Sekhavat Mutharasan ,Chennai ,Communist Party of India ,State Secretary ,Mutharasan ,Tamil Nadu ,Tamils ,
× RELATED திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் உயிரிழப்பு!!