×

கவிதா ஜாமீன் வழக்கில் சிபிஐ மற்றும் ஈடி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

டெல்லி திகார் சிறையில் அடைக் கப்பட்டுள்ள கவிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் வரும் 20ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post கவிதா ஜாமீன் வழக்கில் சிபிஐ மற்றும் ஈடி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,CBI ,ED ,Kavita Bail ,New Delhi ,Kavita ,Telangana Chandrasekharra ,Hyderabad ,Delhi ,CPI ,
× RELATED கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர்...