×

காவேரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதாக புகார்; மீன்கள் செத்து மிதப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் வேதனை..!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவேரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதினால் மீன்கள் செத்து மிதப்பதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுவளம் ஊராட்சி கோட்டைமேடு பரிசல் படித்துறை மற்றும் அதன் அருகே காவேரி ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதனால் துர்நாற்றம் வீசுவதால் தண்ணீர் எடுக்கவும், துணி துவைக்கவும் குளிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக காவேரி ஆற்றின் தண்ணீர் மிகவும் மாசடைந்து வருவதாகவும், இதற்கு ரசாயன கழிவுகள் கலப்பதே காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவேரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதாக புகார்; மீன்கள் செத்து மிதப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Kaveri River ,Salem ,Cauvery river ,Edappadi ,Salem district ,Dinakaran ,
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...