×

கரூர் அருகே மின் இணைப்பை மாற்ற ரூ.1000 லஞ்சம் வாங்கிய போர்மேன் சிறையில் அடைப்பு

கரூர்: கரூர் அருகே மின் இணைப்பை மாற்ற ரூ.1000 லஞ்சம் வாங்கிய போர்மேன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் அடுத்த ஆட்சிமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டின் கட்டுமானத்தின் போது வாங்கிய மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்காக கரூர் ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது போர்மேன் முருகானந்தம் (49), ரூ.1,500 லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு ரூ.1000 தருவதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நேற்று முன்தினம் கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.1000யை முருகானந்தத்திடம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார், முருகானந்தத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ராஜலிங்கம், வழக்கை விசாரித்து வருகிற 20ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post கரூர் அருகே மின் இணைப்பை மாற்ற ரூ.1000 லஞ்சம் வாங்கிய போர்மேன் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Kelakmangalam ,Dinakaran ,
× RELATED கரூர் – திருச்சி சாலையில் விபத்து...