×

அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்?: கர்நாடகாவில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது : 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநில மக்கள் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணைய ராஜீவ்குமார் கடந்த மார்ச் 29ம் தேதி அறிவித்தார். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் மொத்தம் 2,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு ஆளும் பாஜ, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இடையே போட்டி நிலவுகிறது. அங்கு ஒரு மாதமாக நடந்த அனல் பறக்கும் பிரசாரத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று 224 தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிக்கும். 5 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 579 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக நகர பகுதியில் 24 ஆயிரத்து 063 மற்றும் ஊரக பகுதியில் 34 ஆயிரத்து 219 என மொத்தம் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் சுமார் 3 லட்சம் பேர் ஈடுபடுகிறார்கள். தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்க 2,400 சிறப்பு பார்வையாளர்கள், 2,400 கண்காணிப்பாளர்கள், 2,016 பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

மேலும் ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் பெண் ஊழியர்கள் நிர்வகிக்கிறார்கள். 226 வாக்குச்சாவடிகள் இளைஞர்கள் நிர்வகிக்கிறார்கள். 224 பேரவை தொகுதிக்கு தலா ஓரு இளைஞர் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 1.56 லட்சம் பேர் தேர்தலில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க மாநில போலீஸ், துணை ராணுவப்படை உள்பட 1.56 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி மே 13ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

The post அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்?: கர்நாடகாவில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது : 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்