- இந்திய கம்யூனிஸ்ட்
- கரம்பாக்குடி
- கம்யூனிஸ்ட்
- முல்லங்குருச்சி பஞ்சாயத் கொட்டக்காடு
- கரம்பக்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- இந்தியன்
- தின மலர்
கறம்பக்குடி, நவ.11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குருச்சி ஊராட்சி கோட்டைக்காடு கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கிளை கூட்டம் நடைபெற்றது.
ஜெகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சேசுராஜ் பேசினார். இதில் முள்ளங்குறிச்சி ஊராட்சி கோட்டைக்காடு கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். கோட்டைக்காடு கிராமத்தில் இருந்து வட தெரு கிராமம் செல்லும் சாலை தார்சாலை குளம் போல காட்சியளிக்கிறது. நெடுஞ்சாலை துறை ஆய்வு செய்து தார் சாலையை சீரமைக்க வேண்டும். கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள தேரோடும் சாலை உயர்த்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வியோனா நன்றி கூறினார்.
The post கறம்பக்குடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கூட்டம் appeared first on Dinakaran.
