×

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணைய இயக்குநர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில், நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் சுந்தர்ராஜன், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வருகின்ற 2024ம் ஆண்டு நடக்கவுள்ள இந்திய நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய 4 சட்டமன்ற தொகுதிகளின் இவிஎம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பெறப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செவிலிமேடு கிராமத்தில் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு அமைந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 4.7.2023ம் ஆண்டு முதல் பெங்களூரு பொறியியலாளர்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்படி, முதல் நிலை சரிபார்ப்பு பணியினை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் நேற்று முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார். கடந்த 27.7.2023ம் தேதி அன்று பேலட் யூனிட் 4882, கண்ட்ரோல் யூனிட் 2493, விவிபி டி-2126 முதல்நிலை சரிபார்ப்பு பணி நிறைவடைந்துள்ளது. ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, பயிற்சி கலெக்டர்கள் அர்பிட் ஜெயின், சங்கீதா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணைய இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED மாம்பழம் சின்னம் கோரி பாமக கடிதம்