×

கமல் மன்னிப்பு கேட்க கூறுவது ஏற்புடையதல்ல: அதிமுக கண்டனம்

கிருஷ்ணகிரி: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘டெல்டா விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு இழப்பீடு வழங்குவது போல், பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் பேசவில்லை. தமிழ் மீதான பற்றின் காரணமாக தமிழ் மொழியிலிருந்து கன்னடம் தோன்றியதாக கூறியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறுவது ஏற்புடையதல்ல’ என்றார்.

The post கமல் மன்னிப்பு கேட்க கூறுவது ஏற்புடையதல்ல: அதிமுக கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Kamal ,AIADMK ,Deputy General Secretary ,K.P. Munusamy ,MLA ,Delta ,Kamal Haasan ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது