- சென்னை திருவள்ளிகேனி
- கமகால காமேஸ்வரர் கோவில்
- சென்னை
- திருவல்லிக்கேணிகாமகல
- காமேஸ்வரர்
- கோவில்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- இந்து மதம்
- சமய அறக்கட்டளைகள் அமைச்சர்
- சேகர்பாபு
- இந்து சமய அறநெறிகள் துறை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணிகாமகலா காமேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 7.5 கோடி மதிப்பிலான காலி மனை மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (28.11.2024) சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு காமகலா காமேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.7.5 கோடி மதிப்பிலான காலி மனை மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி, ராஜா அனுமந்த தெருவில் சர்வே எண் 2592-1 ல் அமைந்துள்ள 5305 சதுரடி பரப்பளவு கொண்ட காலி மனையானது. அருள்மிகு காமகலா காமேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமானது என மான்பமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் அவர்களின் அறிவுரைகளின்படி, உதவி ஆணையர் பாரதிராஜா அவர்கள் முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் காலி மனை மீட்கப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 7.5 கோடியாகும்.
The post சென்னை திருவல்லிக்கேணி காமகலா காமேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 7.5 கோடி மதிப்பிலான காலி மனை மீட்பு appeared first on Dinakaran.