×

காக்களூர் ஊராட்சியில் ரூ.2.32 கோடியில் ஏரி குளம் சீரமைப்பு பணி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஊராட்சியில் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் ஏரி மற்றும் தாமரை குளம் ஆகியவற்றை தூர்வாரி சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் காக்களூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் காக்களூர் ஊராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் காக்களூர் ஏரியை மேம்படுத்தும் பணி மற்றும் ரூ.74.95 லட்சம் மதிப்பீட்டில் தாமரை குளம் தூர்வாரி சீரமைப்பு என மொத்தம் ரூ.2 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது.விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயக்குமார் செயற்பொறியாளர் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று ரூ.2 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் காக்களூர் ஏரி மற்றும் தாமரை குளத்தை தூர்வாரி சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாபு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார் மெல்கிராஜா சிங் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பூவை ஒன்றிய செயலாளர் கமலேஷ் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் உமாமகேஸ்வரன் தியாகராஜன் சௌந்தரராஜன் ஒன்றிய நிர்வாகிகள் சொக்கலிங்கம் தரணி சாமுண்டீஸ்வரி சண்முகம் சீனிவாசன் ராமச்சந்திரன் பரமேஸ்வரன் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post காக்களூர் ஊராட்சியில் ரூ.2.32 கோடியில் ஏரி குளம் சீரமைப்பு பணி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kakhalur ,Minister ,Awadi Cha M. Nassar ,THIRUVALLUR ,AVADI SA ,KAKHALUR URADCHI, THIRUVALLUR DISTRICT ,M. Nassar ,THIRUVALLUR URATCHI UNION RURAL DEVELOPMENT AND ,URACHI DEPARTMENT ,KAKHALOOR URADCHI ,Kakhalur Uratchi ,Avadi Cha. ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு