×

கபடியில் இந்தியா வெற்றி தொடக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க அதிக வாய்ப்புள்ள விளையாட்டுகளில் ஒன்று கபடி. ஆடவர், மகளிர் என 2 பிரிவிலும் இந்தியா வலுவான அணியாக இருப்பதால் 2 தங்கம் வெல்வதற்கான வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், ஆண்கள் கபடி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நேற்று வங்கதேசத்துடன் மோதியது. அதிரடியாக விளையாடிய இந்தியா 55-18 என்ற புள்ளிக் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

* மகளிர் ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்தியா முதல் ஆட்டத்தில் 34-34 என தைவானுடன் டிரா செய்திருந்தது. 2வது ஆட்டத்தில் நேற்று தென் கொரியாவுடன் மோதிய இந்தியா 56-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

The post கபடியில் இந்தியா வெற்றி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Kabaddi ,Asian Games ,
× RELATED பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை...