டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 870 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். வங்கதேச தொடரில் மொத்தம் 11 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். 869 புள்ளிகளுடன் அஸ்வின் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அஷ்வினும் வங்கதேசத்திற்கு எதிராக 11 விக்கெட்களை எடுத்தார்.
809 புள்ளிகளுடன் ஜடேஜா 6வது இடத்தில் நீடிக்கிறார்.மேலும் குலதீப் யாதவ் 679 புள்ளிகளுடன் 16வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் அசத்தல்
டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் வங்கதேச தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 792 புள்ளிகளுடன் 3 வது இடத்தை பிடித்துள்ளார். 22 வயதிலேயே ஜெய்ஸ்வால் கோலி, ரோஹித் சர்மா முந்தி 3வது இடத்தை பிடித்துள்ளார். 724 புள்ளிகளுடன் விராட் கோலி 6 வது இடத்திலும், பண்ட 718 புள்ளிகளுடன் 9 வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் 468 புள்ளிகளுடன் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். 358 புள்ளிகளுடன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
The post ஐசிசியின் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடம் பிடித்து அசத்தல்! appeared first on Dinakaran.