×

புதுமாப்பிள்ளை வீட்டில் நகை கொள்ளை

திருவள்ளூர்: மணவாள நகர் கபிலர் நகர், குட்டிமணி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வீரசேகரன் (26). இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்களாகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ம் தேதி புதுமாப்பிள்ளையான வீரசேகரன், தனது மனைவி நிர்மலாவை ஆற்காட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு கொண்டு போய்விடச்சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மறுநாள் 24-ந்தேதி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது பீரோவில் வைத்திருந்த நான்கரை சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.

The post புதுமாப்பிள்ளை வீட்டில் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Ramalingam ,Veerasekaran ,Kuptimani Street, Gruvalnagar Kabilar Nagar ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...