×

இஸ்ரேல் பிரதமர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு பிடிவாரண்ட்: ஐரோப்பிய யூனியன், கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு

நெதர்லாந்த்து: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் நடைபெறும் போரில் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இம்மூவர் பொறுப்பானவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான போரில் இழைக்கப்படும் அது மீறல்கள், கொலைகள், போர்குற்றங்களாக வரையறுக்கப்படுகின்றன. அதே நேரம் காசா மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்காமல் பட்டினியில் ஆழ்த்துவது மானுடத்திற்கு எதிரான குற்றமாக சர்வதேச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்று கொண்ட 125 நாடுகளில் ஐரோப்ப யூனியனில் உள்ள 27 உறுப்பு நாடுகள் கனடா, இத்தாலி, நெதர்லாந்து , பெல்ஜியம், ஈராக் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படுவதை ஏற்பதாக தெரிவித்துள்ள இங்கிலாந்து தனது முழு ஆதரவையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்டை நிராகரிப்பதாகவும் ஐசிசிக்கு அதற்கான அதற்கான அதிகாரம் இல்லை என்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட முடிவு குறித்து உலக தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட உள்ளதாக பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவின் டெட்ராய்ட் மாகாணத்தில் உள்ள டியர்பார்ன் நகர் மேயர் ஐசிசி பிறப்பித்துள்ள பிடிவாரண்டை ஏற்பதாக கூறியுள்ளார். தங்கள் நகருக்குள் நெதன்யாகு, கேலண்ட் அடியெடுத்து வைத்தால் கைது செய்யப்படுவார்கள் என்றார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரோம் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு நெதன்யாகு, கேலண்ட் சென்றால் அவர்களை அந்த நாடுகள் கைது செய்ய முடியும். நெதன்யாகு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது தடுக்கப்படும். மேலும் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதும் தடுக்கப்படும்.

 

The post இஸ்ரேல் பிரதமர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு பிடிவாரண்ட்: ஐரோப்பிய யூனியன், கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Israel ,Defense Minister ,European Union ,Canada ,Italy ,Netherlands ,International Criminal Court ,Benjamin Netanyahu ,Yoav Galant ,Hamas ,Mohammed Tayeb ,Prime Minister of ,Former Minister of Defense ,Dinakaran ,
× RELATED மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல்...