×

போர் தொடங்கி விட்டது.. டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை..!!

தெஹ்ரான்: டிரம்பின் மிரட்டலுக்கு அடியபணிய மாட்டோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் 5 நாட்களை கடந்து தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இஸ்ரேல் மாற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனி பதுங்கி இருக்கும் இடம் தெரிந்து விட்டதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டு அதிர்வலையை கிளப்பியுள்ளார். கமேனியை கொலை செய்யும் திட்டம் தற்போது இல்லை என தெரிவித்த டிரம்ப், ஈரானின் ஒட்டுமொத்த வான்வெளியும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொறுமைக்கும் எல்லை உண்டு என பதிவிட்டுருக்கும் அவர், ஈரான் தலைவர் கமேனி நிபந்தனையின்றி சரணடைவதே ஒரே தீர்வு என தெரிவித்தார்.

இந்நிலையில், டிரம்பின் மிரட்டலுக்கு அடியபணிய மாட்டோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “போர் தொடங்கிவிட்டது. பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு (இஸ்ரேல்) நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை. சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

The post போர் தொடங்கி விட்டது.. டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Trump ,Iran ,Supreme Leader Khamenei ,Tehran ,Supreme Leader ,Ayatollah Ali Khamenei ,United States ,Israel ,Dinakaran ,
× RELATED 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு;...