×

இஸ்ரேல் மீது 340 ஏவுகணை தாக்குதல்: ஹிஸ்புல்லா அதிரடி

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய 340 ஏவுகணை தாக்குதலில் 11 பேர் காயமடைந்ததாகவும், அப்பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக வும் கூறப்படுகிறது. இஸ்ரேல் – காசா இடையிலான போரில் இதுவரை 44,211 பேர் பலியான நிலையில் 1,04,567 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல் லெபனானில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் 3,754 பேர் பலியாகினர்; 15,626 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் மருத்துவமனை அதிகாரி உட்பட 12 மருத்துவ ஊழியர்கள் காயமடைந்தனர். இதற்கிடையே இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தரப்பில் 340 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் 11 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா நடத்திய ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் படைகள் இடைமறித்து அழித்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் லெபனான் தலைநகரின் பெய்ரூட் நோக்கி இஸ்ரேல் படைகள் ஏவுகனை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

The post இஸ்ரேல் மீது 340 ஏவுகணை தாக்குதல்: ஹிஸ்புல்லா அதிரடி appeared first on Dinakaran.

Tags : 340 missile attack on ,Hizbullah ,Tel Aviv ,Hezbollah ,Israel ,Gaza ,340 ,attack on Israel ,Hizbullah action ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நீதிமன்றத்தில் ஆஜர்