×

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.8.5 கோடி வழங்கப்படும் என பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம்தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது. 32 விளையாட்டுக்களில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதில் 200 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கி்றனர். இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் களம் இறங்க உள்ளனர்.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.8.5 கோடி வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக அறியப்படும் பிசிசிஐ, கிரிக்கெட்டைத் தாண்டி இந்திய விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவளித்து வருகிறது. பிசிசிஐ அறிவித்துள்ள நன்கொடை இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கும், வரவிருக்கும் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கும் அவர்களின் ஆதரவைக் காட்டுகிறது.

மேலும் ஏற்கனவே பார்படாஸில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ 125 கோடியை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி பாரீஸ் ஒலிம்பிக் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.8.5 கோடி வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளதாவது; ” 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் ரூ.8.5 கோடிகளை IOAக்கு வழங்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.8.5 கோடி வழங்கப்படும் என பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BCCI ,Indian Olympic Association ,Paris Olympics ,MUMBAI ,WORLD'S LARGEST SPORTS FESTIVAL ,OLYMPICS ,33rd Olympic Games ,French ,Paris ,Dinakaran ,
× RELATED இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா...