×

பெர்த்தில் இந்தியா பெற்ற வெற்றி யாரும் எதிர்பார்க்காதது: ரிக்கி பாண்டிங் பேட்டி

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்த் மைதானத்தில் ஒரு தோல்வி கூட அடையாத ஆஸ்திரேலியா அணியை இந்தியா வீழ்த்தியது ஆஸ்திரேலிய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறுகையில், ‘‘சுமார் 300 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பதால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நிச்சயம் ஏமாற்றத்தில் இருப்பர். பெர்த் மைதானத்தில் நடந்த 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றிருக்கிறது.

அதனால் இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது சாமர்த்தியமான முடிவு. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். ஆனால் 2வது இன்னிங்ஸில் அவர் சேர்த்து வைத்து மிரட்டிவிட்டார். ஜெய்ஸ்வால் மிகவும் திறமையான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தபோதிலும் பெர்த் மைதானத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மேலும் இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதை விடவும் வெளிநாட்டில் சிறப்பாக விளையாடி வருகிறது. பெர்த்தில் பெற்ற வெற்றி, அதை மீண்டும் நிரூபித்துள்ளது’’ என்று கூறினார்.

The post பெர்த்தில் இந்தியா பெற்ற வெற்றி யாரும் எதிர்பார்க்காதது: ரிக்கி பாண்டிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Perth ,Ricky Banding ,Sydney ,Australia ,PERTH STADIUM ,Dinakaran ,
× RELATED இந்திய வீராங்கனை மந்தனா உலக சாதனை